2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

20ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் நிராகரிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும்  20ஆவது திருத்தச் சட்டத்தை வட மாகாண சபை நிராகரித்துள்ளது. 

அதேநேரம் 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், அதனை அந்த நேரத்தில் பரிசீலிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுளன்ளதாக, வட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .