Editorial / 2017 ஜூலை 24 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், எஸ்.ஜமால்டீன்
யாழ். மேல் நீதிமன்ற நிதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கண்டித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் இன்று (24) தங்களது கண்டனத்தினை தெரிவித்து கவனயீர்பில் ஈடுபட்டனர்.
கடமையைப் பகிஷ்கரித்து, மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த சட்டத்தரணிகள், “ஆயுதமுனையில் நீதியை தடுக்க நினைக்காதே”, “நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்“ போன்ற பல்வேறு சுலோகங்களையும் தாங்கியவாறு அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
நீதிபதியின் மீதான தாக்குதல் நீதிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளதுடன் குற்றவாளிகள் உடன் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இத்தாக்குதலில் உயிர்நீத்த பொலிசாரின் கடமையுணர்வை பாராட்டிய அவர்கள், அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதாகத் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் காயமுற்றவர் நலன்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டனர்.

31 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
23 Nov 2025
23 Nov 2025