2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மகளுக்கு 14 வயசு: ஒன்றை கைல கொடுக்காத ஐஸ்வர்யா

Editorial   / 2026 ஜனவரி 22 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்திய திரையுலகின் முக்கிய பிரபலமாக இருக்கிறார், ஐஸ்வர்யா ராய். இவர், தனது மகளை மிகவும் கண்டீஷனுடன் வளர்ப்பதாக கூறப்படுகிறது.   

உலகளவில், இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அரியப்படுபவர் ஐஸ்வர்யா ராய். எத்தனை இந்திய அழகிகள் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டாலும், ஐஸ்வர்யா ராய்தான் அனைவராலும் இப்போது வரை உலக அழகியாக கருதப்படுகிறார். இவர் உலக  அழகி மட்டும் கிடையாது, திரையுலகில் இருக்கக்கூடிய ஸ்மார்ட் ஆன நட்சத்திரங்களுள் ஒருவர். இவர், இவரது மகளை வளர்க்கும் பாணி குறித்த விஷயங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஐஸ்வர்யா ராயும், பாலிவுட்டின் பெரிய குடும்பத்தை சேர்ந்த அபிஷேக் பச்சனும் காதலித்தனர். இதையடுத்து சில ஆண்டுகளிலேயே, இவர்களின் பெற்றோர் திருமணம் பேசி முடித்தனர். 2007ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணமும் நடந்தது. இவர்களுக்கு 2011ஆம் ஆண்டில் ஆராத்யா பச்சன் என்கிற பெண் குழந்தையும் பிறந்தார். 

எந்த நட்சத்திரம் கேமராவிற்கு முன்னால் இருந்தாலும் அவர்களை ஏதாவது ஒன்றை வைத்து குறை சொல்வதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படித்தான், நடிகை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களின் மகள் போட்டோ பிடிப்பவர்களுக்கு முன்னால் வந்து விட்டால், அவர்களை ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பர்.

ஆராத்யா, கேமரா ஃப்ளாஷை பார்த்தாலே வித்தியாசமாக நடந்து கொள்வது, ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடுவது குறித்து ஊடகங்கள் அனைத்தும் பலவாறாக எழுதின. இப்போது ஆராத்யாவிற்கு 14 வயதாகிறது. இவர், அம்பானி நடத்தும் பள்ளியல் படித்து வருகிறார். இவருக்கும் தனது தாய்-தந்தை போலவே நடிப்பில் ஆர்வம் உள்ளது. இதனை ஸ்கூல் ட்ராமா மூலம் நிரூபித்துள்ளார்.

அபிஷேக் பச்சன், தனது மகள் எப்படி வளர்க்கப்படுகிறார் என்பது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். ஐஸ்வர்யா, ஆராத்யாவிற்கு நிறைய மரியாதையான பழக்கங்களை கற்றுக்கொடுப்பதாகவும், தங்கள் குடும்பம் இயங்குவது சினிமாவால்தான் என்று கூறுவதாகவும் சொல்லியிருக்கிறார். இதனால், ஆராத்யா பணிவுடன் நடந்துகொள்ள இது உதவியதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

ஆராத்யா தற்போது தன்னம்பிக்கை பொருந்திய டீன் ஏஜ் குழந்தையாக இருப்பதாகவும், தனது உணர்வுகளை அல்லது எண்ணங்களை சொல்ல அவர் தயங்குவதில்லை என்றும் கூறியிருக்கிறார். 

ஆராத்யாவிற்கு 14 வயது ஆகு போதிலும், அவருக்கென்று தனியாக செல்போன் இதுவரை வழங்கப்படவில்லையாம். இது குறித்தும் ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் முன்னரே கலந்தாலோசித்து முடிவு செய்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார். ஆராத்யா எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என்றும், ஆராத்யாவின் நண்பர்கள் அவருடன் பேசவேண்டும் என்றால் அவர்கள் நேரடியாக ஐஸ்வர்யாவிற்குதான் போன் செய்ய வேண்டும் என்ரும் கூறியிருக்கிறார். 

   ஆராத்யாவிற்கு இணையதளத்தை உபயோகிக்க மட்டும் அனுமதி இருக்கிறதாம். ஆனாலும், அதை பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் செய்வதற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டுமாம். ஆராத்யாவிற்கு, தன் பாடங்களுக்காக ஆராய்ச்சி செய்வது மிகவும் பிடிக்குமாம். அதே போல, ஆன்லைனில் பிறர் குறித்து வரும் சர்ச்சைகள் அல்லது கிசுகிசுக்களையும் ஆராத்யா படிப்பதில்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்திருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X