2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

இலங்கையிலுள்ள ஈரான் கடற்படையினரின் சடலங்கள் குறித்த செய்தி

Freelancer   / 2026 மார்ச் 10 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ஈரானிய கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் 'பார்ஸ்'  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .