S.Renuka / 2026 மார்ச் 10 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய், நடிகை திரிஷா மற்றும் இயக்குநர் பார்த்திபன் ஆகியோரைக் சுற்றி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரங்கள் பற்றி திரைப்பட விமர்சகர் பிஸ்மி தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, "விஜய்க்கு இதுவரை ஒரு தனியான இமேஜ் இருந்தது. இத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவிலும் அரசியலிலும் இருந்தாலும், தனது குடும்ப வாழ்க்கை பற்றி எந்த மேடையிலும் பேசாமல் இருந்தார். அதேபோல தனது படங்கள் பற்றி கூட அரசியல் மேடைகளில் பேசாமல் இருந்தார். அதனால் அவர்மீது ஒரு மரியாதை இருந்தது.
சில சர்ச்சைகள் வந்தபோதும், குறிப்பாக 'ஜனநாயகன்' படம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டபோதும் கூட அவர் எந்த மேடையிலும் அதைப் பற்றி பேசி அனுதாபம் தேடவில்லை. அதனால் 'தனது குடும்பத்தை வைத்து அரசியல் செய்யாதவர்' என்ற நல்ல பெயர் அவருக்கு இருந்தது" என்று பிஸ்மி கூறியுள்ளார்.
ஆனால், சமீபத்தில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் விஜய் பேசிய சில வார்த்தைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். அப்போது விஜய், "இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினைக்காக நீங்கள் போராடி மனம் புண்படுவதை பார்த்தால் எனக்கும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு ஆதரவாக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். அது அவ்வளவு வொர்த்தான விஷயம் இல்லை" என்ற வகையில் பேசி இருந்தார்.

இதுகுறித்து பிஸ்மி கூறும்போது, "விஜய் அந்த மேடையில் தனது ரசிகர்கள் மீது கவலைப்பட்டு தான் அந்த வார்த்தைகளை கூற முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அவர் கடைசியில் கூறிய 'அது வொர்த் இல்ல' என்ற வார்த்தை தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது" என்றார்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல், கட்சியில் இருக்கும் பல பெண்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.
"ஒருசிலர் விஜய்க்கு ஆதரவாக பேசலாம். ஆனால், எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி, குழந்தைகளை பெற்ற மனைவி குறித்து இப்படி பேசுவது பலருக்கும் சரியாக தோன்றவில்லை.
அவர் பேசும்போது இருந்த உடல் மொழியும், அந்த விஷயத்தை முக்கியமில்லாதது போல எடுத்துக் கூறிய விதமும் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதுவரை அவர்மீது இருந்த நல்ல இமேஜ் பாதிக்கப்பட்டு விட்டது" என்றும் பிஸ்மி கூறியுள்ளார்.

திரிஷா - பார்த்திபன் சர்ச்சை
அதே நேரத்தில் நடிகை திரிஷா குறித்து இயக்குநர் பார்த்திபன் பேசிய விஷயத்தையும் பிஸ்மி குறிப்பிடுகிறார். "முதலில் பார்த்திபன் திரிஷா பற்றி ஓபனாக பேசியதை பார்த்தபோது எனக்கு அதில் தவறு ஒன்றும் இல்லை என்று தோன்றியது. காரணம் பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கள் எந்த விஷயத்திலும் வெளிப்படையாக கருத்து சொல்ல மாட்டார்கள். அமைதியாக இருந்து விடுவார்கள்.
ஒரு சிலர் மட்டும் தான் தைரியமாக பேசுவார்கள். அதுபோல, பார்த்திபனும் தைரியமாக கருத்து கூறியிருக்கிறார் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பிஸ்மி கூறும்போது, "அந்த பதிவை பார்த்தபோது பார்த்திபன் இது எல்லாம் பப்ளிசிட்டிக்காக செய்திருக்கிறாரோ என்ற எண்ணமும் எனக்கு வந்தது" என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபனின் விளக்கம்
இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட தனது வீடியோவில் பார்த்திபன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். "நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயல்பாக பதில் சொன்னேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் வேண்டுமென்றே செய்தேன் என்று கூறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
திரிஷா குறித்து பேசியதற்காக நான் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டேன். ஆனால், த்ரிஷா வெளியிட்ட அந்த பதிவு என்னை மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டது" என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
இவ்வாறு விஜய் மகளிர் தின மேடையில் பேசிய வார்த்தைகள், த்ரிஷா - பார்த்திபன் இடையே ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதனால் இந்த விவகாரம் இன்னும் எவ்வளவு தூரம் செல்லப் போகிறது, அடுத்ததாக யார் என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago