2021 மே 12, புதன்கிழமை

'அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபைக்கு நிரந்தர கட்டடம்'

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபைக்கு நிரந்தர கட்டடம் நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபை தவிசாளர் ஐ.எல்.எம். ஹாஸிம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மத்தியஸ்த சபைக்கு நிரந்தர கட்டடம் இல்லாமையால் அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பல சிரமங்களுக்கு மத்தியில் வருகின்றது.

ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் திராய்க்கேணி ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய இவ் இணக்க சபைக்கு முறைப்பாட்டாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணை செய்வதற்கு தனித்தனியான பிரிவுகள் இல்லாமையால் ஒரே அறையில் வைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது.மாதமொன்றுக்கு சுமார் 45 வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இவ்விடயம் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரிடம் சுட்டிக்காட்டியதையடுத்து,இதற்கு நிரந்தர கட்டடம் நிர்மாணித்துத் தருவதாகவும் இதற்கான இடத்தினை உடன் வழங்குமாறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலளரிடம் கேட்டுள்ளதாகவும் அவர்; மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .