2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு விசாரணை

Freelancer   / 2026 ஜனவரி 19 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, இலஞ்ச ஊழல் விசார​ணை ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலின் கீழ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டிருந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தனது சட்டரீதியான வருமானத்தை விட 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் ஊடாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X