2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

 

அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் கே.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடற் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களுக்கான இணைப்பாளர் ஐ.சி.எம்.இர்பான், நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கை சமர்ப்பித்தலின் முக்கியத்துவம் குறித்தும் கருத்து முன்வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் 53 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் 2019ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள், 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் செயற்பாடுகள் குறித்தும் அராயப்பட்டன.

அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்டத்தில் செயற்படுதல் தொடர்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிறுவனத்தின் நோக்கம், தங்களுடைய செயற்றிட்டங்கள், செயற்பாட்டின் நோக்கங்கள், தற்போதைய நிலை தொடர்பில் முன்வைப்புகளை மேற்கொண்டனர்.

மாவட்டத்தில் வாழ்வாதாரம், பெண்கள், சிறுவர் அபிவிருத்தி, சுயதொழில் , நுண்கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் அக்ரட், சுவாட், பிரண்டினா பவுண்டேசன், சேவா, ஐ.சி.ஐ., இஸ்லாமிக் றிலிப், வேல்ட் விசன், எம்.எம்.சீடி, ஏ.டப்ளியூ.எவ் உள்ளிட்ட ப்லவேறு நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--