Editorial / 2026 ஜனவரி 02 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.
வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சியின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளையே அவர் துறந்துள்ளார். தனது இராஜினாமா கடிதம் கட்சிக்கு 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நாளன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
சி.வை.பி ராமின் மகன் டானியல் ராம், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான பதவி வகிக்கின்றார்.
கொழும்பு மாநகரசபையன் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பு நாளில் அவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அவரை கட்சி இடைநிறுத்தியுள்ளது. இந்நிலையிலேயே சி.வை.பி ராம் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாகவும், தவிர்க்க முடியாத காரணத்தாலேயே தனது மகன் சபைக்கு செல்லவில்லை எனவும் ராம் கூறினார்.
இந்நிலையில், கலாநிதி சி.வை.பி. ராமின் இராஜினாமா கடிதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் பதிலளிக்கவில்லை என அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .