2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

அ.இ.ம.கா. பிரதி தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா

Suganthini Ratnam   / 2016 மார்ச் 16 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அப்பதவிகளிலிருந்து இராஜினமாச் செய்துள்ளார்.

இது தொடர்பான தனது முடிவை எழுத்து மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும்  செயலாளருக்கும் திங்கட்கிழமை  (14) அறிவித்துள்ளதாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

அ.இ.ம.காங்கிரஸின் பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீலுக்கும் தனக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து  மேற்படி முடிவை எடுக்கத் தான் தீர்மானித்தாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பல்வேறுபட்ட காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவரது செயற்பாடுகள் தொடர்பில் கட்சித் தலைமைத்துவத்துக்கு எடுத்துக்கூறியும், அதற்கான எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது, இவரது செயற்பாட்டிடையே அங்கிகரித்தால் போன்று  இருந்துவருவதை அங்கிகரிக்க முடியாது.
மேற்படி பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் என்பவரால் எந்தவிதமான முன்னெடுப்புகளும் தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தனது செயற்பாட்டுக்கும்  தடையாக இருந்து வருகின்றார்' என்றார்.  

எதிர்வரும் தேசிய மாநாட்டின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸுடன்  மீண்டும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது, தற்போது எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் கிடையாது. அது பற்றி பின்னர் யோசிக்க வேண்டும்' எனக் கூறினார்.

இவர் ஆரம்பகாலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--