Freelancer / 2026 ஜனவரி 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் நேற்று 24 மணிநேர கார் பந்தயப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில் தான் அஜித் குமாரின் அணியின் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சேர்ந்த ரேசர் அயர்டன் ரொடான்ட் உயிர் தப்பினார்.
நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் தனி அணியை உருவாக்கி உள்ளார். ‛அஜித் குமார் ரேசிங்' என்ற பெயரில் அந்த அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணி துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ளது.
டுபாயில் உலகத்தரம் வாய்ந்த 'துபாய் 24 ஹவர்ஸ்' கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜித் குமாரின் அணி பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட் ஆண்ட் ரேசிங் என்ற மோட்டார்ஸ்போர்ட் அணியுடன் சேர்ந்து பங்கேற்றுள்ளது.
டுபாயில் நேற்று தொடங்கிய 24 மணிநேர கார் பந்தய போட்டியில் அஜித் குமாரின் அணி சார்பில் 4 பேர் பங்கேற்றனர். கோப் டி ப்ரூக்கர், அயர்டன் ரெடான்ட், யானிக் ரெடான்ட் ம்றம் ரோமெய்ன் வோஸ்னியாக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தா்ன அயர்டன் ரெடான்ட் ஓட்டி சென்ற கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்து புகை வெளியேறியது.
இதையடுத்து அயர்டன் ரெடான்ட் காரில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதில் அதிர்ஷ்டவசமாக அயர்டன் ரெடான்ட் உயிர் தப்பினார். மேலும் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் கார் சேதமடைந்தது. இன்ஜினில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கார் தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளது. இந்த சம்பவம் டுபாய் கார் ரேசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. (a)

1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago