Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீரமா காளிகோவில் ஆலயத்தின் உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எடுத்துவிட்டு உண்டியலை கிணற்றுக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறப்படும் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல், நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்
ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த உண்டியலை கடந்த புதன்கிழமை இரவு உடைத்து கொள்ளையிடப்பட்டுளது. இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுது;து அக்கரைப்பற்று வாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிசார், வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்
இதனையடுத்து கொள்ளையிடப்பட்ட உண்டியலில் இருந்த சில்லறை பணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொடுக்கப்பட்டு அதற்கான தாளாக மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளதுடன் உடைத்த உண்டியலை வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றில் போடப்;பட்டுள்ளதாகவும் சிறிதளவு பணம் செலவு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கிணற்றில் வீசப்பட்ட உண்டியல் மீட்கப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட் பணத்தில் ஒருபகுதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
அதேவேளை இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடுத்த மாதம் இடம்பெறும் நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்த ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago