Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு கப்பன் பூங்கா பகுதியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு சொந்தமான கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற ஆர்யன்கான் கைவிரல்களால் ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பொலிஸார் அவரது கேளிக்கை விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கேளிக்கை விடுதி அதிகாலை 1.25 மணி வரை செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கப்பன் பூங்கா பொலிஸார் அந்த கேளிக்கை விடுதியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் கடந்த வாரம் தொழில் அதிபர் ஒருவர், இரவு விருந்து குறித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுகுறித்தும் அவரது விடுதியின் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்த போது, அவரது கேளிக்கை விடுதியும் அதிகாலை 1.30 மணி வரை செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் கப்பன் பூங்கா பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago