2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

6 குழந்தைகளுக்கு எய்ட்ஸ்

Janu   / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த மாற்று சிகிச்சைக்கு பிறகு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலசீமியா நோயால் (ஹீமோகுளோபின் உற்பத்தியைப் பாதிக்கும் ஒரு மரபணு ரத்தக் கோளாறு) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்ட மருத்துவமனையில் ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளில் 6 குழந்தைகளுக்கு தற்போது எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பே இது கண்டறியப்பட்ட போதிலும், தற்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுஎச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 8 முதல் 12 வயது உடையவர்கள் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் கவனக்குறைவால் மட்டுமே குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X