2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் முகுது விகாரை அபிவிருத்தி குழு, இராணுவம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை காலை 07.30 மணிக்கு  பொத்துவில் முகுது விகாரையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, இருதய நோய், தோல் நோய் போன்றவற்றுக்கு சிகிச்சைகளும் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை,பற் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளதுடன் விசேட தேவையுள்ளவர்களுக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

லகுகல, பாணாமை மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கு விசேட இலவச போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .