2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

உணவுப் பொதிகள், ஆடைகள் வழங்கல்

வி.சுகிர்தகுமார்   / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள், ஆடைகள் வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றது.

தைத்திருநாளைக் கொண்டாடும் முகமாக, கொழும்பு மனிதநேய அமைப்பின் நிதியீட்டத்துடன், கல்முனை சிவநெறி அறப்பணிப்பணி மன்றத்தினுடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட  பொருள்களே, இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கே இவை வழங்கிவைக்கப்பட்டன.

சிவநெறி அறப்பணி மன்றத்தின்  தலைவர்  ரி.சந்திரபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சோபிதா, பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஆ.சசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, பொருள்களைக் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .