Editorial / 2026 மார்ச் 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் குறித்து வெளியிட்ட விமர்சனத்தைத் தொடர்ந்து, தமக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கூறிய 'குட்டிக்கதை' குறித்து ஜூலி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் உண்மை நிலையை அறியாமல் சிலர் அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவர்கள் ஜூலியைச் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், தன்னைக் குறிவைத்துத் திட்டமிட்ட முறையில் அவதூறு பரப்பப்படுவதாக ஜூலி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"கிட்னி விற்பனை மோசடியில் என்னைத் தொடர்புபடுத்தி, ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு எனக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் தவெக நிர்வாகி ஒருவர் உட்பட 8 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."
மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜூலி தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் ரீதியான விமர்சனத்தைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
9 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
1 hours ago