Janu / 2026 மார்ச் 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பாவிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற ஐந்து சீன பிரஜைகள், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்திருந்த இக்குழுவினர், அதிகாலை 12:10 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 'சைனா ஈஸ்டர்ன்' (China Eastern) விமான சேவைக்கு சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பயண பொதிகளை சோதனையிட்ட போது, அதிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 99,400 சிகரெட்டுகள் அடங்கிய 497 கார்ட்டூன் அட்டைப்பெட்டிகள் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்ட 422 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டி.கே.ஜி.கபில

12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago