2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 மார்ச் 10 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை வைத்திருந்த நபரொருவரை, நேற்று புதன்கிழமை (09) கைது செய்ததாக, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் ஏ.எஸ்.கே.பண்டார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர், குறித்த துப்பாக்கியை வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .