2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், நடராஜன் ஹரன், எஸ்.கார்த்திகேசு

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  பெண் ஒருவர் உட்பட 03 பேர் அம்பாறை, விநாயகபுரம் பிரதேசத்தில்; கடந்த  செவ்வாய்க்கிழமை (19) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் கஞ்சா இருப்பதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், குறித்த பிரதேசத்தின் 04 பிரிவிலுள்ள பழைய தபாற்கந்தோர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டபோது, அவ்வீட்டிலிருந்து 365 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், 36 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனை அடுத்து, குறித்த பிரதேசத்தின்  சிவன் கோவில் வீதியில் 10 கிராம் கஞ்சாவுடன் 45 வயதுடைய ஆண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மேலும், குறித்த பிரதேசத்தின் 03ஆம் பிரிவிலுள்ள காளி கோவில் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் சோதனை மேற்கொண்டபோது, அவ்வீட்டிலிருந்து 60 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், 55 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .