2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கடல் மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கடல் மணல் ஏற்றிய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் இன்று (28) வெள்ளிக்கிழமை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் மணல் ஏற்றியமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (27) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .