2021 மே 10, திங்கட்கிழமை

கணவன் கொலை; மனைவி கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், வடிவேல் சக்திவேல், வி.சுகிர்தகுமார்,எஸ்.கார்த்திகேசு,  நடராஜன் ஹரன்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமத்தில் சனிக்கிழமை (30) இரவு குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி (வயது 46) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த  தங்கவடிவேல் பார்த்தீபன் (வயது 42) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். விவசாயியான இவர், வெற்றிலை வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்துள்ளார்.

தம்பிலுவில் கிராமம் 02ஆம் பிரிவைச் சேர்ந்த இச்சந்தேக நபர், ஏற்கெனவே திருமணம் முடித்த நிலையில் அவருக்கு 02 பிள்ளைகள் இருப்பதுடன், அவரது கணவரும் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார்.  

இதன் பின்னர், இச்சந்தேக நபர் இரண்டாம் தாரமாக பார்த்தீபனை திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையில் நீண்டநாட்களாக தகராறு இருந்துவந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தினத்தன்று கணவன் வெறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கோபமடைந்த மனைவி வீட்டிலிருந்த கோடாரியால் கணவன் மீது தாக்கியுள்ளார். இதன்போது, கணவனின் கழுத்து, தலையில் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இவரைத் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X