2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 18 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் கீழுள்ள  கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 'இன்கொம் -2016' என்ற தொனிப்பொருளில் மாபெரும் கண்காட்சி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

உள்ளூர்க் கைத்தொழிலுக்கு ஊக்கமளித்து இலங்கையின் உற்பத்திகளையும் சேவைகளையும் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதே இக்கண்காட்சியை நடத்துவதன் நோக்கமாகும் என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு இங்கு போதிய உள்ளூர் வளங்களும் மனித வலுவும் இருப்பதால், இக்கண்காட்சியில் அவற்றைப் பயன்படுத்தி, உள்ளூர்க் கைத்தொழிலாளர்களை ஊக்கப்படுத்த முடியும்.

அரசாங்கத்தின் 10 இலட்சம் வேலைவாய்ப்பு என்ற குறிக்கோளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், எதிர்வரும் வருடங்களில் கைத்தொழிற்றுறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் நடைபெறும் முதலாவது கண்காட்சிக்குப் பின்னர் அடுத்த கண்காட்சியை கேகாலை மாவட்டத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு அவ்வப்  பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய, சாதாரண கைத்தொழிற்றுறையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம், மீன்பிடி, நெசவுக்கைத்தொழில், கைப்பணிப்பொருட்கள் உள்ளிட்ட கிராமிய கைத்தொழிற்றுறைகளிலும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுறைகளிலும் ஈடுபடுவோரை இக்கண்காட்சியின் மூலம்; உள்வாங்குவதுடன்,  காலப்போக்கில் இத்துறையில் புதிய தொழில்நுட்பம், நவீன கைத்தொழில் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இதனை மேலும் விருத்தி செய்வதற்கும்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .