2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கதிர்காமத்துக்கு பஸ் சேவை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கதிர்காம ஆடிவேல் உற்சவத்தையிட்டு அம்பாறை, கல்முனைப் பிரதேசத்திலிருந்து கதிர்காமத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 03 பஸ்கள் தினமும் காலை 6.30, 7.30, 09 மணிக்கு சேவையில் ஈடுபடுகின்றன என கல்முனைச்சாலை அத்தியட்சகர் மா.கிருஸ்ணராஜ், நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

முன்கூட்டி ஆசனப் பதிவை மேற்கொள்ள முடியும் என்பதுடன், இப்பதிவுக்காக 30 ரூபாய் அறவிடப்படுகிறது. மேலும், ஒருவழிக் கட்டணமாக 320 ரூபாய் அறவிடப்படுகிறது.

குழுவாகப் பதிவு செய்யப்படின், தனியாக பஸ்ஸை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீர்த்தம்வரை இச்சேவை இடம்பெறும் என்பதுடன், தீர்த்தத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களை அங்கிருந்து அழைத்துவரவும் கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், கதிர்காமத்துக்குச் செல்லும் பக்தர்கள் அதிகரிக்கப்படின், அதிகளவான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .