Freelancer / 2026 மார்ச் 17 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழைவீழ்ச்சிக் குறைவு மற்றும் நிலக்கரி இறக்குமதி தாமதம் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், நாட்டில் மின்சார விநியோகத்தில் எந்த சிக்கல்களும் அடையாளம் காணப்படவில்லை என எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மின்சார வளங்களைச் சீராக பகிர்ந்தளிக்க QR குறியீடு அடிப்படையிலான முறைமை பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலக்கரித் தாமதம் குறித்த செய்திகளுக்குப் பதிலளித்த அவர், சில கப்பல்கள் மே 26 வரை கால அவகாசம் கோரியுள்ள போதிலும், ஏனைய நிலக்கரித் தொகுதிகள் ஏற்கனவே நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என அவர் உறுதிபடக் கூறினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .