Niroshini / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
இறக்காமம் சர்வோதய அமைப்பின் அனுசரணையில் கற்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இரவு இறக்காமம் பிரதேச செயலக கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இறக்காமம் பிரதேசத்தில் வாழும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 வரிய குடும்பங்களின் கற்பிணித் தாய்மார்களுகே இந்த நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் கலந்து கொண்டு கற்பிணித் தாய்மார்களுக்கான நுளம்பு வலைகளை வழங்கி வைத்தார்.
மேலும், சர்வோதய அமைப்பின் உதவிப் பணிப்பாளர் அஸ்வித அனுரத்த, கிழக்கு மாகாண சகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர், சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம்.றசீன், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago