Freelancer / 2025 டிசெம்பர் 27 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட துப்பாக்கி திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா - வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி இருந்து மீட்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
32 minute ago
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
5 hours ago
9 hours ago