Freelancer / 2025 டிசெம்பர் 27 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.
ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த பள்ளிவாசல், சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில், அலவைட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு நேற்று (26) வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், பள்ளிவாசலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், பள்ளிவாசலை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (a)

2 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Dec 2025