2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

குடுவில் அல்-ஹிறா வித்தியாலயத்தில் தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிக்க அனுமதி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, இறக்காமம் கல்விக் கோட்டத்திலுள்ள குடுவில் அல்-ஹிறா வித்தியாலயத்தில் தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவ்வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.பஜீர் தெரிவித்தார்.

இவ்வித்தியாலயமானது இதுவரை காலமும் அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளுள் ஒன்றாக தரம் -05வரை இயங்கி வந்தது.

இவ்வித்தியாலயத்தில்; தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய, 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்; திகதி முதல் தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிப்பதற்கான அனுமதியை மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேவர்த்தன வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--