Freelancer / 2025 டிசெம்பர் 27 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள குதிந்த ரசிகர்களால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதன் ஆடியோ லாஞ்ச் இன்று மலேசியாவின் புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது.
80 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்திற்கான டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வந்தது.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்ததால், மைதானத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் முழுவதும் டிராபிக்கால் ஸ்தம்பித்தன. சில இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் மாற்றுப் பாதைகளை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விழா தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்திற்குள் நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், சில ரசிகர்கள் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு நிலைமையை சீர்படுத்தினர். இதனால் விழா எந்த பெரிய பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றது.
தமிழ்நாட்டில் விஜய் பட வெளியீடுகளைப் போலவே, மலேசியாவிலும் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க, விஜய் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில ரசிகர்கள் விஜய்யின் வசனங்களை முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பியதால், மைதானம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.
இந்த விழாவில், விஜய்யின் பெண் ரசிகைகளும் அதிக அளவில் கலந்துகொண்டனர். 'ஜனநாயகன்' மற்றும் 'தளபதி' என்ற பெயர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து, விஜய்யின் புகைப்படங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புக்கிட் ஜலீல் மைதானத்தின் நுழைவுவாயிலில், கிரேன் உதவியுடன் வைக்கபட்ட மிகப் பெரிய ஜனநாயகன் பட பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பேனருக்கு முன்பு ரசிகர்கள் கூட்டம் திரண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, வெறும் ஆடியோ லாஞ்சாக மட்டுமல்லாமல், 'தளபதி திருவிழா' என்ற பெயரில் ஒரு முழுமையான இசை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதில், விஜய்யின் பழைய சூப்பர் ஹிட் பாடல்களை, அந்தப் பாடல்களை பாடிய அசல் பாடகர்களே மேடையில் பாடுவது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
விழாவில் நடந்த ஒவ்வொரு தருணமும் சமூக வலைதளங்களில் நேரடியாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டம், கூட்ட நெரிசல், மேடை அலங்காரம் உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகி, 'ஜனநாயகன்' மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. R
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago