2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர் நியமனம் வாபஸ்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

'கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவுக்கமைவாக, அந்நியமனத்தை இன்று திங்கட்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ,டைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'இலங்கை கல்வி நிர்வாக சேவையின் புதிய சேவைப் பிரமாணத்தின் பிரகாரம், வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் உட்பட அனைத்து கல்வித் துறைசார் நியமனங்களையும் வழங்கும் அதிகாரம் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், அதனை மீறும் விதத்தில் கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதுடன் ஏ.எம்.அஹமட்லெப்பை என்பவருக்கு நியமனமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த நேர்முகப் பரீட்சைக்கும் அதன் அடிப்படையிலான நியமனத்துக்கும் தடையுத்தரவு வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ,லங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வழக்கொன்றை தாக்கல் செய்ததன் பேரில், கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி அந்த நியமனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ,ந்த தடையுத்தரவை ஏற்று செயற்படாமல் இருந்தமையைத் தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது' என்றார்.

'இதேவேளை, ,டைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை மறுதினம் புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இந்நியமனம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதுடன், முன்னர் கடமையாற்றி வந்த ஏ.நசூர்கானை தொடர்ந்தும் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுமாறும் கேட்கப்பட்டுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X