2021 மே 06, வியாழக்கிழமை

'சகலரும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலை'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தற்போது நாட்டிலுள்ள சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 'சமூக ஐக்கியத்தை ஊக்குவித்தல்;' எனும் தொனிப்பொருளில் சர்வமத ஒன்றுகூடல், இறக்காமம் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (25) மாலை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாடொன்று அபிவிருத்தி அடைய வேண்டுமானால், முதலில் அங்கு மத ஐக்கியமும் புரிந்துணர்வும்  காணப்பட வேண்டும். அப்போதே நிறைவான அபிவிருத்தியை காணமுடியும்' என்றார்.   

'இலங்கையில் மதங்களுக்கிடையிலான சக வாழ்வை மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் மூலம் வளர்க்க வேண்டும். சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக சமாதானத்தை ஏற்படுத்துவது இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். நாம் நிம்மதியாக வாழ்ந்தால் எதிர்காலச் சமூகம் நிம்மதியாக வாழும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .