Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூலை 14 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, நிந்தவூர் பிரதான வீதியில் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 05 நபர்களில் ஒரு நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றைய 04 நபர்களும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையிலும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் இன்று (14) விடுதலை செய்துள்ளார்.
நிந்தவூரில் பொதுச் சந்தை இருந்து கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதிக்கருகில் மீன், மரக்கறி வகைகள், பழ வகைகள் மற்றம் விளையாட்டு பொருட்கள் என்பவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்வதால் பொது மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர்.
நிந்தவூர் பிரதேச சபை மற்றும் பொலிஸார் ஆகியோர் குறித்த வியாபாரிகளுக்கு இவ் இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டாமென பல முறை அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தும் இதனை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இவ்வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago