2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போதைப்பொருளுடன் சிக்கிய சகோதரர்கள்

Janu   / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொகுசு ஹோட்டல் அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  சகோதரர்கள் இருவர் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 01 கிலோ 56 கிராம் கோகைன், 01 கிலோ. 212 கிராம் ஹெராயின் மற்றும் 04 கிலோ 116 கிராம் ஐஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 6, வெள்ளவத்தை W.A.De சில்வா மாவத்தையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு வீடொன்றில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது ஒருவர் 116 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையில், அவரது சகோதரர் கடவத்தை, தலுவப்பிட்டி, மிஹிந்து மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருளை வைத்துக்கொண்டு தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. பின்னர் குறித்த ஹோட்டலை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது மற்றைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து கோகைன், ஐஸ் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X