2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தோருக்கு அபராதம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு 8500 ரூபாவும் மற்ற நபருக்கு 7500 ரூபாவும் அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

குறித்த இருவரும் அவர்களது வீடுகளில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பதற்கு தயாராக இருந்த போதே  திருக்கோவில் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .