R.Tharaniya / 2025 நவம்பர் 13 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
அதன்படி, தமிழில் நாளை ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.
காந்தா:
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கும்கி 2:
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸ் மாஃபியா கம்பெனி:
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிணறு:
இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.
தாவூத்:
இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாய்: ஸ்லீப்பர் செல்:
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சூதாட்டம்:
இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆட்டோகிராஃப்:
கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago