2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

7 கடவுச்சீட்டுகள் வீதியோரத்தில் இருந்து மீட்பு

Editorial   / 2025 நவம்பர் 13 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (12) மதியம் இந்த கடவுச்சீட்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடவுச்சீட்டுகளை யாரோ இந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த கடவுச்சீட்டுகளை  இந்த இடத்தில் யார் விட்டுச் சென்றனர் என்பதைக் கண்டறிய புல்மோட்டை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X