2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சுதந்திரக் கட்சியில் பெண்கள் இணைவு

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

பொத்துவில் தொகுதிக்குட்பட்ட  மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து,  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவியுமான சட்டத்தரணி ஸ்ரீயாணி விஜயவிக்ரமவிடமிருந்து, அதற்கான அங்கத்துவ அட்டையைப் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வு, மாளிகைக்காடு ஜாபிர் பௌண்டேசனின் 10 வருட நிறைவையொட்டி,  மாளிகைக்காடு சமூக அபிவிருத்திச் சபை, மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய  மண்டபத்தில்  நேற்று (18) காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளரும் , காரைதீவு முஸ்லிம் பிரதேசத்துக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பளருமான ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களான  கீர்த்திஸ்ரீ வீரசிங்க , எம்.எம்.எம்.ஸஹீல் , எஸ்.பி.சீலன் , காரைதீவு தமிழ் பிரதேச  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்  வீ.கிறிஷ்ணமூர்த்தி, சாய்ந்தமருது பிரதேச ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்  எம்.ஐ.எச்.ஜமால், மருதமுனை  ஸ்ரீ லங்கா சுதந்திரககட்சியின் அமைப்பாளர் சர்மில் ஜஹான் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உறுப்பினர்களுக்கான அடையான அட்டை, நியமனப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--