2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சுகாதாரத் துறைக்கு 2500 பில்.ரூபாய் ஒதுக்கீடு

Gavitha   / 2016 மார்ச் 12 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

'2016ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 2500 பில்லியன் ரூபாய் பணத்தை அரசாங்கம் சுகாதார சேவைகளுக்கு வழங்குகின்றது' என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுத்தின் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு 6 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இவ்வாறு ஒதுக்கப்படுகின்ற நிதியில், 80 சதவீதமான பணம்  வைத்தியசாலையின் கட்டடத்தேவைகளுக்காகவும் 20 சதவீதமான பணம் வைத்திய செலவீனங்களுக்காகவும் இந்த நிதிகள் செலவிடப்படுகின்றதது.

மக்களின் சுகாதாரத்தையும் நாட்டில் வாழுங்கின்றவர்கள் அனைவரும்  சுகாதாரத்துடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதை கருத்தில் கொண்டே, அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு இந்த அளவு பெரியத்தொகை பணத்தை செலவிடுகின்றது' என்று அவர் குறிப்பிட்டார்.

'நாட்டையும், மக்களையும் சுகாதாரத்துடன் வாழ வைக்கின்ற பாதுகாக்கின்ற பாரிய பொறுப்புக்கள் வைத்தியர்களுக்கும் வைத்தியத்துறை சார்ந்தவர்களுக்கும் உள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .