Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
சாதியத்தினை பேசி சாதிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர் என தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதியின் செயலாளர் எம்.காளிதாசன் தெரிவித்தார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் இன்று(29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறவேண்டும் எனும் நோக்கில் சாதி, மதத்தினை பேசி மக்களை பிரித்தாள முனைத்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் இத்தேர்தலில் தோல்வியை தழுவிக் கொண்டதை நாம்; அறிவோம்.
மதவெறி, சாதி வெறியை பேசி மாகாண சபைகளுக்கு தெரிவானவர்கள் கூட இத்தேர்தலில் தோற்றுப்போனமை இதற்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.
அவ்வாறு எண்ணியவர்களுக்கே தக்கபாடத்தினை மக்கள் இம்முறை புகட்டியுள்ளனர். இப்பாடத்தின் பின்னராவது அவர்கள் தம்மை திருத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்றப்பட்டது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறானவர்களின் கூற்றுக்கு செவிசாய்க்காமல் தமிழர்களின் பலமாக இருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
அதேவேளை, எதிர்வரும் காலங்களிலும் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்து நமது ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago