Freelancer / 2026 மார்ச் 16 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் டில்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் 3 ஆவது முறையாக ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. டில்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 ஆவது முறையாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து தனி விமானத்தில் அவர் கடந்த 14 ஆம் திகதி டில்லி புறப்பட்டுச் சென்றார். ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
டில்லியில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த விஜய், சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று (15) காலை ஆஜரானார். காலை 11 மணிக்கு அவரிடம் விசாரணை தொடங்கியது. குறிப்பாக, பிரச்சாரத்துக்கு விஜய் தாமதமாக வந்ததுதான் நெரிசலுக்கு காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை மீண்டும் எழுப்பினர்.
அதிகாரிகள் புதிதாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். அத்துடன், ஏற்கெனவே கேட்ட கேள்விகளை மீண்டும் கேட்டனர். முன்பு அளித்த பதிலைத்தான் விஜய் கூறுகிறாரா, மாற்றிக் கூறுகிறாரா என்பதை பதிவு செய்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர்,பொலிஸ் உயர் அதிகாரிகள் அளித்த பதில்களுக்கும், கட்சி நிர்வாகிகள் அளித்த விளக்கங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை முன்வைத்தும் விஜய்யிடம் அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்காக பல முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் அவரிடம் காண்பித்து விளக்கம் பெற்றுள்ளனர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 6 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என தெரிவிக்கப்படுகிறது. (a)
13 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
37 minute ago