2026 மார்ச் 16, திங்கட்கிழமை

சிங்கப்பூருக்கு பறந்தார் ரணில்

Editorial   / 2026 மார்ச் 16 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று புறப்பட்டுச் சென்றார்.

அவர் எதிர்வரும் புதன்கிழமை (18) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தொடர்ந்து, அவர் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து ஓய்வு எடுப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அ, கடந்த வாரமும் உள்நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X