Freelancer / 2026 மார்ச் 16 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே நேற்று 16 ஆவது நாளாக போர் நீடித்தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசுவில் அந்த நாட்டின் இராணுவ தளம் உள்ளது. அங்கு ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சிராசுவில் உள்ள இராணுவ முகாம்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின.
இதில் ஈரான் இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதேபோல ஈரானின் இஸ்பகானில் உள்ள இராணுவ முகாம்களை குறிவைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான் வழி தாக்குதலை நடத்தின. ஈரான் முழுவதும் இதுவரை 1,400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி, டுபாய் பகுதிகளில் அமெரிக்க விமானப் படைத் தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. மேலும் டுபாய் மெரினா கடற்கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவுகணைகள் விழுந்து வெடித்துச் சிதறின.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் இராணுவம் நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் துறைமுகத்தை அண்மித்துள்ள எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து எரிகின்றன. அங்கு 2 ஆவது நாளாக நேற்றும் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குவைத்தில் அமெரிக்க விமானப் படைத் தளம் செயல்படுகிறது. அந்த படைத்தளத்தை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று 2 ஏவுகணைகளை வீசியது. மேலும் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் இராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலையத்தின் ரேடார் கட்டமைப்பு சேதமடைந்தது. சவூதி அரேபியாவின் அல் கார்ஜ் நகரில் அமெரிக்க விமானப் படைத்தளம் செயல்படுகிறது. அந்த தளத்தை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று 6 ஏவுகணைகளை வீசியது. மேலும் 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் நடுவானில் அழிக்கப்பட்டன.
கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், பஹ்ரைன் நாட்டின் ஷேக் இசாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், அந்த நாட்டின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. அவை நடுவானில் அழிக்கப்பட்டன. இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்தும் ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. (a)

7 minute ago
13 minute ago
14 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
14 minute ago
28 minute ago