Suganthini Ratnam / 2016 மார்ச் 30 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 70 பேருக்கும் மேற்பட்டோருக்கு சிவப்பு நிற எச்சரிக்கை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி எ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
மேற்படி சிவப்புநிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளவர்கள் தங்களின் இடங்களை இரண்டு வாரங்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
டெங்கொழிப்பு வாரம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலுவில், பாலமுனை, தைக்கா நகர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களிலுள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் இன்று புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த மூன்று மாத காலத்துக்குள் டெங்கு நோயால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா போன்ற பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்களினால் பரவியமை கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
34 minute ago
2 hours ago
3 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago
22 Nov 2025