2021 மே 06, வியாழக்கிழமை

சாய்ந்தமருதில் திறப்பு விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

சாய்ந்தமருது ஜும்மாப் பெரிய பள்ளிவாசலில் புனரமைப்பு செய்யப்பட்ட நூலகம் இன்று திங்கட்கிழமை (05) மாலை திறந்து வைக்கப்பட்டது.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் பிரதம அதிதியாகவும் வக்பு சபை உறுப்பினர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வருகின்ற இந்நூலகமானது கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீதின் மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .