Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தற்போது சிறுவர்களின் பாதுகாப்பு இந்த நாட்டுக்கு பாரிய சவாலாக இருந்துவருகின்றது. சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, துரோகம் இழைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனரென அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டிலும் பிரதேச சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அனுசரணையுடனும் 'பிள்ளைகளை உயிர் போல் காப்போம்' என்ற தொனிப்பொருளில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், அட்டாளைச்சேனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்கு போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக இருப்பதுடன், பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வறுமையும் காரணங்களாக அமைகின்றன. எனவே, சிறுவர்களின் பாதுகாப்பு விடயங்களில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதுடன், போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோதச் செயற்பாடுககளிலிருந்து தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .