2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சிலர் தடையாக செயற்படுகின்றனர்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக செயற்பட முயற்சிக்கின்ற போதிலும் அதற்கு தடையாக அவர்களில் சிலர் செயற்படுகின்றனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் (26) நடைபெற்ற மூன்று அடுக்கு தொடர்மாடி கட்டட அமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

வீடமைப்பு தொடர்பில் அவர்கள் பல்வேறு ஆட்சேபனையான கருத்துக்களை முன்வைத்திருப்பது மன வேதனையளிக்கின்றது. சில ஊடகங்களும் அண்மைக்காலமாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றன. தெளிவின்மை காரணமாகவே அவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்கு உகந்த முழுமையான வீடொன்றை பெற்றுக் கொடுப்பதே எனதும் ஜனாதிபதி மற்றும் பிரதமரினதும் நோக்காகும்.

எது எவ்வாறாயினும் சட்டதிட்டங்களுக்கு அமைய எனது பணி தொடரும். கிழக்கு மாகாணத்தில் 133,000ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றபோதிலும் 65,000ஆயிரம் வீடுகள் திட்டமிட்டபடி எதிர்வரும் நான்கு வருடங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .