Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிறப்பு பாடல்களில் ஆடுவது தனக்கு பிடித்த விஷயம் அல்ல என நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். இருப்பினும், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்திற்காக மட்டும் அந்த கனமான முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இதனை அவர் கூறினார்.
அவர் பேசுகையில், “நான் நடிக்கும் படங்களில் மட்டுமே நடனமாட விரும்புகிறேன். பிற நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடல்களில் ஆட விருப்பமில்லை. இருப்பினும் ‘புஷ்பா 2’ படத்தில் நடனமாடியது சரியான முடிவாகவே பார்க்கிறேன். அதன் மூலம் எனக்கு பெரிய ரீச் கிடைத்தது” என்றார்.
சமீப காலமாக ஸ்ரீலீலாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அவர், தற்போது ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம், வருகிற 10-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
36 minute ago
53 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
53 minute ago
4 hours ago