S.Renuka / 2026 ஜனவரி 08 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, பல்வேறு பிரச்சினைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பட தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
கடந்த மாதம் இயக்குனர் ராஜ் நிடிமொருவை, கோவையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார் சமந்தா.
அதன்பிறகு தேனிலவு கொண்டாட்டங்கள் முடிந்தநிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார்.
இதற்கிடையில் ரசிகர்களுக்கு அவர் குட் நியூஸ் கொடுத்துள்ளார்.
அதாவது அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக போகிறது என்பது தானாம் அது. 3 ஆண்டுகள் கழித்து வெளிவரும் அவரது படத்தின் அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
அதேவேளை பலரும் 'நாங்க வேற குட் நியூஸ் எதிர்பார்த்தோமே...' என்றும் சமூக வலைத்தளங்களில் 'கமெண்ட்' அடித்து வருகிறார்கள்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago