Freelancer / 2026 ஜனவரி 09 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார்.
ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தின் மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே. எனவே, இதற்கான மொத்த செலவு 6 பில்லியன் டொலர் வரை செல்லும் என மதிப்பிடப்படுகிறது.
கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்ததால் அமெரிக்கா அதனை முக்கியமாகக் கருதுகிறது.
அதேபோல், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (a)
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago